திருநங்கையாக மாறிய கணவர்: சேர்த்து வைக்க மனைவி கலக்டரிடம் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (13:22 IST)
நாமக்கல் மாவட்டம், திருச்செங்க்கோடு அருகே ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர் கலக்டரிடம் வினோத மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் கார்த்திக் திருநங்கையாக மாறியதாக கூறப்பட்டுள்ளது.


 
 
அந்த மனுவில் ஜோதிமணி மேலும் கூறியது, ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் தனக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணமானது. திருமணமான சில மாதங்களிலேயே கணவர் வீட்டினர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.
 
எனது கணவருக்கு அவர்கள் வேறு திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் எனக்கு குழந்தை பிறந்தது. தகவல் தெரிவித்தும், கணவரோ, அவர்கள் வீட்டாரோ என்னையும், குழந்தையையும் பார்க்க வரவில்லை.
 
இந்நிலையில் சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு போன் செய்து எனது கணவர் திருநங்கையாக மாறிவிட்டதாகவும், இனி அவர் உன்னோட சேர்ந்து வாழமாட்டார் எனவும் கூறினார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து என் கணவர் கார்த்திக்கோடு என்னை சேர்ந்து வைக்க வேண்டும் என ஜோதிமணி தனது புகார் கடிதத்தில் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்