மனைவிக்கு கத்திக்குத்து: அதன்பின் கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

புதன், 6 ஜூலை 2022 (19:35 IST)
குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு அவர் இறந்துவிட்டதாக கருதி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கோவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி பூபாலன் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தியதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து ரத்தவெள்ளத்தில் மயக்கத்தில் இருந்த மனைவி ஷாலினி இறந்து விட்டதாக கருதிய பூபாலன் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து பக்கத்து அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினி தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தெரிந்ததும் கதறி அழுத காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்