தன் மனைவி ஏற்கனவே ஏழு பேரை திருமணம் செய்தவர் : கணவர் பரபரப்பு புகார்

Webdunia
திங்கள், 11 ஜூலை 2016 (19:00 IST)
ஏற்கனவே பல திருமணங்கள் செய்ததை மறைத்து, தன்னையும் திருமணம் செய்த மனைவியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போடியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் பாண்டி போலீசாரில் புகார் கொடுத்துள்ளார்.


 

 
தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர் பாண்டி. இவர் பெங்களூரில் வேலை செய்து வந்த போது, பேஸ்புக் மூலம் இவருக்கு அனுஷா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவரும் காதலித்து, பின் திருமணம் செய்து கொள்ளும் முடிவெடுத்தனர். 
 
ஆனால், தான் கரூர் எம்.பி.சின்னசாமியின் மகள் என்றும்,  தன்னுடைய தந்தை திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார் எனவே, நாம் திருமணம் செய்து கொள்ளலாம். குழந்தை பெற்றுக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அனுஷா கூறியுள்ளார். எனவே பாண்டி அவரை திருமணம் செய்துள்ளார். இருவரும் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாண்டி போடியில் வசித்து  வருகிறார். இந்நிலையில், பாண்டி, போடி காவல் நிலையத்தில் அனுஷா மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
 
அதில் அனுஷா தன்னை ஏமாற்றி இதுவரை 15 லட்சம் பிடுங்கிக் கொண்டதாக புகார் கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் போடியில் உள்ள அவரின் வீட்டிற்கு அனுஷாவின் உறவினர் என்ற பெயரில்  சிலர்  தன்னையும், தனது குடும்பத்தையும் மிரட்டினர். 
 
இதுபற்றி நான் விசாரித்ததில், அனுஷா ஏற்கனவே ஏழு பேரை காதலிப்பதாக கூறியதோடு, அவர்களிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன். எனவே அனுஷா மீதும், தன்னை மிரட்டிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
ஆனால், இதுபற்றி போலீசாரிடம் பேசிய அனுஷா, தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய பாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
 
கணவனும், மனைவியும் மாறி மாறி அளித்த புகாரை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்