ராம்குமார் தற்கொலை விவகாரம்: களத்தில் குதித்த மனித உரிமை ஆணையம்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (15:42 IST)
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராம்குமாரின் மரணத்தை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை செய்ய தானாக முன்வந்துள்ளது. 


 

 
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துக்கொண்டார் என்று சிறைத்துறையினர் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ராம்குமார் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகிறது.
 
ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் கூறினார். ரம்குமாரின் பெற்றோர்களும் தங்கள் மகனை காவல்துறையினர் கொலை செய்துவிட்டதாக கூறினர்.
 
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் ராம்ராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது மாநில மனித உரிமை ஆணையம் ராம்குமாரின் மரணத்தை விசாரணை செய்ய தானாக முன்வந்துள்ளது.  
அடுத்த கட்டுரையில்