’வடிவேலு ’உலக புகழ் நேசமணி ஆனது எப்படி ? ஒரு பார்வை

Webdunia
வியாழன், 30 மே 2019 (16:51 IST)
வடிவேலு என்று சொன்னதுமே இனம்புரியாத ஒரு சிரிப்பு ஏற்படும். இந்திய தொலைக்காட்சிகளில் வடிவேலுவின் கதாப்பாத்திரங்களை எப்போது பார்த்தாலும் சோகத்தை ஆற்றும் அருமருந்தாகும் என்பது யாரும் சொல்லித்தெரியவேண்டியதில்லை. சமீப காலமாக வடிவேலு எனும் பெருங்கலைஞனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.
ஆரம்ப காலத்தில் நடிகர் ராஜ்கிரன் சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து ஒரு ஹிட் படம் கொடுத்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சத்தில் சிம்மாசனம் இட்டுக்கொண்டிருந்த போது, ஓரு நண்பரின் திருமணத்துக்காக மதுரைக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஒரு பேச்சுத்துணையாக இருக்கும் பொருட்டு அந்த நண்பர் , ராஜ்கிரனுக்கு அறிமுகப்படுத்திய நபர்தான் வடிவேலு.
அதன் பின்னர் வெகு கலகலப்பாக வடிவேலு பேசிய பாணி , உடல்மொழி யெல்லாம் பார்த்த ராஜ்கிரன் தனது ராசானின் மனசிலே என்ற படத்தில் 1991 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். அப்படத்தில் ஒரு காட்சியில்  கவுண்டமணியிடம் அடிவாங்கும் போது அண்ணே படாத இடத்தில பட்டறப்போகுதுண்ணே ! என்று பேசியது இயக்குநரும் நடிகருமான ராஜ்கிரன் ஸ்கிரிப்டில் எழுதாதது. ஆனால் அனைவரும் சிரித்து ரசித்தனர். அது திரைப்படத்திலும்வெற்றி பெற்று வடிவேலுவுக்கு முகவரி கொடுத்தது.
அதனையடுத்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாள இயக்குநர் சித்திக் இயக்கிய ஃபிரண்ட்ஸ் படத்தில் ஹீரோவாக விஜய் நடித்தார். அவருக்கு ஜூனியராக சூர்யா நடித்தார்.இதில் நேசமணி கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தார். படத்தி மிகபெரும் பணக்காரரான ராதாரவி வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கச் தன் குழுவுடன் செல்கிறார் நேசமணி அதில் ஆரம்பம் முதல் படம் முடிவும் வரை வடிவேலுவின் மேனரிசத்துக்கும், நகைச்சுவையை அள்ளித்தெளிக்கும் டயலாக் டெலிவரிக்கும் பஞ்சமேயிருக்காது.
அதில் ஒரு காட்சியில் மேல் மாடியில் கிருஸ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த ரமேஷ் கண்ணா மேல் மாடியில் நின்று வேலைசெய்யும்போது, அவரது கையிலிருந்து சுத்தியல் கைநழுவி கீழே நின்றிருக்கும் நேசமணி மண்டையைப் பதம்பார்க்கும்.
இதுதான் தற்போது டுவிட்டரில் மோடியையே மிஞ்சுகிற அளவு டிரெண்டிங் ஆகியுள்ளது. அதன்பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருந்தாலும் வின்னர் படத்தில் நடித்த ’கைப்புள்ள ’கதாப்பாத்திரத்தை யாராலும் மறக்கமுடியாது . அவர் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகர் நடித்த படம் அளவுக்கு மக்களிடம் ரீச் ஆன இம்மை அரசன் 23 ஆம் புலிகேசி ’படமும்  தமிழ் சினிமா உள்ளவரை வடிவேலுவை நினைவில் வைத்திருக்கும்.
தற்போது வடிவேலுவின் மறுவருக்கைக்காக எத்தனை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதையே அண்மைய நேசமணி டிரெண்ட் வலியுறுத்துகிறது எனலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்