நாய்கறி எப்படி ஆட்டுக்கறியானது?

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (14:47 IST)
சமீபத்தில் பரவிய நாய்க்கறி வதந்தி குறித்து நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 17ந் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் 2000 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டது. இது நாய்க்கறியாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். அந்த இறைச்சிகள் அனைத்தும் புதைக்கப்பட்டன. இதனால் தமிழகமெங்கிலும், முக்கியமாக சென்னையில் இறைச்சி விற்பனை அடிவாங்கியது.
 
சமீபத்தில் வெளியான அறிக்கையில் பிடிபட்டது நாய் கறி இல்லை ஆட்டுக்கறிதான், ஆனால் அவை கெட்டுப்போன ஆட்டிறைச்சி என கூறப்பட்டது.
 
இதனிடையே இதுகுறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் உணவுத்துறை அதிகாரிகள் இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை சமர்பிக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் இறைச்சியை ஆய்வு செய்ய தனி ஆணையரை நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், முதலில் இதனை நாய்க்கறி என கூறிய அதிகாரிகள் பின்னர் ஏன் அதனை ஆட்டுக்கறி என கூறினார்கள்? அவசரம் அவசரமாக இறைச்சியை புதைக்க வேண்டிய அவசியம் என்ன? எந்த விதியின் கீழ் இறைச்சி அளிக்கப்பட்டது? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதுகுறித்து வரும் 6ந் தேதிக்குள் விளக்கமளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்