வீடு தேடிச் சென்று தடுப்பூசி !!!

சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:22 IST)
சென்னை மாநகரத்தில் வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடப்படும் என  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், இந்தியாவிலும் இத்தொற்றுப் பரவியது.  கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றது.

இந்நிலையில் தமி்ழகத்தில் நாள்தோறும் குறைந்த அளவு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை நகரத்தில் வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடப்படும் என  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதில், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று கொரொனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், - 044 -2538 4520, 4612 2300 ஆகிய எண்களில் அழைத்து  முன்பதிவு செய்துள்ளலாம் எனக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்