சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் …டுவீட்டுக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (20:50 IST)
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுவரை மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், டாக்கர், இர்பான் அன்சாரி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜார்கண்டில்  இருந்து தமிழகத்தில் உள்ள சேலத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பதிவிட்டு, அந்தப் பதிவை தமிழ்நாடுபோலீஸ், சேலம் கலெக்டர், முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார். இதைப்பார்த்த தமிழக முதல்வர் பழனிசாமி, எனது குழுவினர் அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வார்கள். இதையே நான் அவர்களிடமும் சொல்லிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2069 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்