வங்கக் கடலில் பலத்த காற்று... மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (16:21 IST)
சமீப காலமாகவே, தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்து, கோடையில் காய்ந்துபோன நிலத்தைக் குளிர்வித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பச்சலனத் தாக்கத்தால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்,நீலகிரி கோவை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட  மற்றும் புதுவை  ஆகிய இடங்களில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
வங்கடலின் ஒரு பகுதியான மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசிவருவதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்