காஸா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்.. 22 குழந்தைகள் உள்பட 70 பேர் பலி!

Mahendran

வியாழன், 15 மே 2025 (10:15 IST)
2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன போராட்டம் இதுவரையும் தொடர்ந்தே வருகிறது. இடையிடையே சில நாட்களுக்கு மட்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
 
அதன்படி நேற்று நேற்று இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ தரப்பின் தகவலின்படி, சுமார் 84 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், காஸா சுகாதாரத்துறை தரவின்படி, இதில் 22 குழந்தைகள் உட்பட 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
ஜபாலியா பகுதியில் மட்டும் 50 பேர் உயிரிழந்ததாகவும், கான் யூனிஸ் என்ற தெற்கு நகரத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பிணை கைதி ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, இஸ்ரேல் தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியதாக கூறப்படுகிறது.
 
இதற்கிடையில், போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பேசிக்கொண்டு வருகின்றன. ஆனால், ஹமாஸை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்