102 டிகிரி கொளுத்தும் வெயிலில் ஆலங்கட்டி மழை.. வேலூர் மக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (16:55 IST)
வேலூரில் இன்று மதியம் 102 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் திடீரென வானிலை மாறி ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
கடந்த சில வாரங்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் வேலூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர் என்பதும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர் சிரமத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் திடீரென வானிலை மாறி ஒரு மணி நேரத்துக்கு மேலாக வேலூரில் மழை பெய்தது குறிப்பாக ஆலங்கட்டி மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்