தமிழகத்தில் கனமழை....வானிலை ஆய்வு மையம்

செவ்வாய், 29 ஜூன் 2021 (20:32 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக  தென்மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் அதன் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  நாளை, தென்காசி, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில்  அடுத்த 2 நாட்கள் மேகமூட்டத்துடன் வானம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஜூலை 1, 2 ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை , சேலம் ஆகிய மாவட்டங்களிலும்,   3 ஆம் தேதி கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,அரியலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்