இன்னும் சிலமணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (13:28 IST)
இன்னும் சில மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கோடை வெயில் ஒரு பக்கம் கொளுத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் கோழை மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் சற்று முன்னர் மிதமான மழை பெய்தது என்பது அதனால் குளிர்ச்சியான தட்பவெட்பம் இருப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்