இந்த நிலையில், போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்ததால், இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் விளைவாக, தென்னாப்பிரிக்கா அணி மூன்று புள்ளிகளுடன் மற்றும் ஆஸ்திரேலியா அணி மூன்று புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 28ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. அதேபோல், மார்ச் 1ஆம் தேதி தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதும்.