மார்ச் 1 வரை கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்..!

Mahendran

வியாழன், 27 பிப்ரவரி 2025 (11:20 IST)
மார்ச் ஒன்றாம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று முதல் மார்ச் ஒன்றாம் தேதி வரை  தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு மேற்கண்ட 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்