அடுத்த சில மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (09:22 IST)
அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்  11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும்  சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே 630 கிலோ மீட்டர் கிழக்கு மற்றும் தென்கிழக்கிலும் நெல்லூருக்கு 740 கிலோமீட்டர் தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 22 மாவட்டங்கள் பின்வருமாறு:
 
சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கொட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்