வங்க கடலில் தோன்றியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சற்றுமுன் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் நான்காம் தேதி அதிக கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.