19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (07:53 IST)
தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் அக்டோபர் 1, 2 தேதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் விடை மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா, தென்கடலோர தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் இந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்