இன்று 14 மாவட்டங்களில் கனமழை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

வியாழன், 23 அக்டோபர் 2025 (13:44 IST)
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் : ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, தேனி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
 
இதற்கிடையில், நாளை கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்