துபாயில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்த, கேரளாவை சேர்ந்த 18 வயது மாணவர் கிருஷ்ணகுமார் வைஷ்ணவ், கல்லூரியில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அவருக்கு முன்கூட்டியே இதயப் பிரச்சினை எதுவும் இருந்ததில்லை என்பதால், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இந்த மாரடைப்பு மரணங்களுக்கு முக்கிய காரணங்கள்: அதிகமான ஜங்க் புட், உடலுழைப்புக் குறைவு மற்றும் மன அழுத்தம் ஆகியவையாகும். இதன் விளைவாக, இளைஞர்களிடையே உடல் பருமன் மற்றும் உடல்நலனில் அலட்சியம் அதிகரிக்கிறது.
இளைஞர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்த்ப்படுகிறது. மேலும், எந்தவொரு உடல்நல பிரச்சினைக்கும் உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவதே புத்திசாலித்தனம் என்றும் வலியுறுத்த்ப்படுகிறது.