9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுக்க போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2023 (08:10 IST)
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சி காரணமாக இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று குறிப்பாக  தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும் அதேபோல் அடுத்த மூன்று மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்