இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.