அப்போது அவர், தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில், நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், "அடுத்த குறுக்கு விசாரணை நவம்பர் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும்போது, நானே நேரில் ஆஜராகி டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தப் போகிறேன். அவர் அரசியலுக்கு வந்தது முதல், அவரது 40 ஆண்டுகால அரசியல் வரலாறு குறித்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்துவேன்" என்று அண்ணாமலை அதிரடியாகக் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து பேசிய அண்ணாமலை, "இந்த வழக்கு ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல; 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. எனவே, இதில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தவறு செய்தவர்கள் யார் சார்ந்த நபராக இருந்தாலும், கரூர் துயர சம்பவத்தில் நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மேலும், "ஓர் அரசியல் தலைவராக சீமானை நான் மதிக்கிறேன். ஆனால், இந்த வழக்கில் அவர் ஏன் பதற்றப்படுகிறார் என்று எனக்கு தெரியவில்லை.