இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது: தென்மேற்கு பருவமழை எப்போது?

Webdunia
புதன், 24 மே 2023 (17:05 IST)
இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை என்பது தற்பொழுது ஓய்ந்திருப்பதாகவும்  அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தெரிவித்து இருக்கிறது
 
ராஜஸ்தான் பஞ்சாப் டெல்லி உத்திர பிரதேசம் ஹரியானா சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் 6 மாநிலங்களில் மலைப்பகுதியை ஒட்டி இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் அந்தமான் கடற் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 
 
மேலும் மே 24ஆம் தேதி கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்