உயிரிழப்பு அதிகரிப்பு ஏன்? சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (21:19 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் சுமார் 400 பேர்கள் வரை உயிரிழந்து வரும் நிலையில் உயிரிழப்பு அதிகமாக இருப்பது ஏன் என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனையை நாடி வருகின்றனர் என்றும் அதனால்தான் உயிரிழப்பு அதிகரிப்பு என்றும், காதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார் 
 
நோய்த்தொற்று உறுதியானதும் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் நோயாளியை காப்பாற்றி விடலாம் என்றும் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்