சென்னை உள்பட தமிழகத்தில் இன்று கடும் வெயில் அடிக்கும் என்பதால் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்
கோடை காலம் தொடங்கி உள்ளதை அடுத்து தமிழகத்தில் வரும் நாட்களில் கடும் வெயில் அடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
எனவே காலை 11:00 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் அவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் முதியோர் கர்ப்பிணிகள் நண்பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் செயற்கை குளிபானங்கள், மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகியவற்றை தவிர்த்து எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், பழச்சாறுகள் அதிகம் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருப்பது நல்லது என்றும் பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும் அறிவுரையாக கூறப்பட்டுள்ளது.