’அக்கவுண்ட்ல பணம் இருக்கு.. எடுக்க முடியல’ - காது குத்து விழாவில் பிளக்ஸ்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (16:45 IST)
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பிறகு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் சிரமம் நீடித்து வருகிறது.


 

இதனால், திருமணம் போன்ற சுபகாரியங்களை நிகழ்த்தும்போது, வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், போதிய அளவில் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாடிப்பட்டி அருகே உள்ள ஒரு உட்கிடை கிராமத்தில் காது குத்து விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு வைக்கபட்டிருந்த பிளக்ஸ் போர்டில் கீழ்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.

’அக்கவுண்ட்ல பணம் இருக்கு.. எடுக்க முடியல
கையில காசு இருக்கு மாத்த முடியல’ என்று இந்த பிளக்ஸ்சில் எழுதியிருக்கிறது.

வழக்கமான இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ்சில் நடிகர்களின் புகைப்படங்களோ அல்லது இருங்காட்டு சிங்கம், நகரத்து வரிப்புலி, கிராமத்து டைனோசர் என்று சாதி புகழ் பாடப்பட்டு இருக்கும்.

ஆனால், இந்த இளைஞர்கள் சமகால நிகழ்வுகளை பிரதிபலித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்