PM SHRI பள்ளிகள் தமிழகத்தில் தொடங்குவது மகிழ்ச்சி..! அண்ணாமலை வரவேற்பு..!!

Senthil Velan
சனி, 16 மார்ச் 2024 (10:30 IST)
PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ள, காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் (இல்லம் தேடிக் கல்வி) போன்றவற்றை, வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பள்ளி மாணவர்கள், பல்துறை அறிவையும், பலமொழிப் புலமையும், தொழிற்கல்வித் திறனையும் ஒருங்கே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: மும்பையில் நாளை இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்..! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.!!
 
நமது மாணவர்கள் நலனுக்காக, தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளிலும், இதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்