இளையராஜாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் அறிக்கை!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:57 IST)
அம்பேத்கர் அவர்கள் விரும்பியதை தான் பிரதமர் மோடி செய்து வருகிறார் என இளையராஜா கூறியது சரிதான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஹண்டே தெரிவித்துள்ளார்
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1949ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைத்ததை 70 ஆண்டுகள் மட்டுமே இன்றைய பிரதமர் 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றியுள்ளார் 
 
இசைஞானி இளையராஜா அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 இன்றைய காங்கிரஸ்காரர்கள் டாக்டர் அம்பேத்கார் உரிமை கொண்டாடுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் 1943 ஆம் ஆண்டு மும்பை மாகாணத்தில் இருந்து சாசன சபைக்குள் டாக்டர் அம்பேத்கர் அவர்களை வரவிடாமல் தடுத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்