ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே” எனப் பதிவிட்டுள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த பதிவு திமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. இது மிகவும் கீழ்த்தரமான பதிவு என அவருக்கு எதிராக பலரும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், #எச்சபொறுக்கிராஜா என்கிற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். பலரும் இதை பயன்படுத்தியதில், டிவிட்டரில் இந்த ஹேஸ்டேக் நேற்று டிரெண்டிங்கில் இருந்தது.