தனியார் பல்கலைகழகம் ஒன்று கவிஞர் வைரமுத்துவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கு பாடகி சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் திடீரென அவர் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியும் டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ரத்து செய்துள்ளது. மீண்டும் பட்டமளிப்பு விழா வேறு நாளில் நடைபெறுமா என்பது தெரியாத நிலையில், இதுகுறித்து தமிழக கட்சிகள் சில கண்டனம் தெரிவித்துள்ளன.
மதிமுக செயலாளர் வைகோ “வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்திருந்தால் ராஜ்நாத் சிங்கிற்கு மரியாதை கூடியிருக்கும்” என கூறியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆண்டாள் நாச்சியாரை அவமானப்படுத்திய வைரமுத்துவுக்கு ராஜ்நாத் சிங் கரங்களால் விருது பெறும் தகுதி கிடையாது என பேசியுள்ளார்.