பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா பகுதியில், செருப்புக்குள் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில், மஞ்சு பிரகாஷ் என்ற ஐ.டி. ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சற்று நேரத்திற்கு பிறகு, அவரது குடும்பத்தினர் செருப்புக்கு அருகில் ஒரு பாம்பு இறந்து கிடப்பதை கண்டனர். உடனடியாக அறைக்குள் சென்று பார்த்தபோது, மஞ்சு பிரகாஷ் வாயில் நுரை தள்ளியபடியும், காலில் ரத்தம் வடிந்த நிலையிலும் படுக்கையில் கிடந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மஞ்சு பிரகாஷ் 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பேருந்து விபத்தில் சிக்கி, காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதன் காரணமாக, அவருக்கு அந்த காலில் உணர்ச்சி குறைவாக இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, பாம்பு கடித்த வலியை அவர் உணர்ந்திருக்க மாட்டார் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.