அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க. ஆட்சியில்ட 207 அரசுப் பள்ளிகள் தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்டுள்ளன" என்று குற்றம்சாட்டினார்.
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் தி.மு.க. அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் திட்டத்திற்கு நான் முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், தி.மு.க. அரசு அந்த பணிகளை துரிதப்படுத்த தவறிவிட்டது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எய்ம்ஸ் திட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டு விரைவில் திறக்கப்படும்