ராகுல் காந்தி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை: ஹெச் ராஜா விளக்கம்..!

சனி, 5 ஆகஸ்ட் 2023 (10:55 IST)
ராகுல் காந்தி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை என்றும் அதிகபட்சனை தண்டனை கொடுத்ததற்கான காரணத்தை மட்டுமே உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது என்றும் பாஜக பிரமுகர். ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
 
மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த நிலையில் இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை நீதிபதி கொடுக்கவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர் ஹெச் ராஜா, ராகுல் காந்தி வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்றும் அதிகபட்ச தண்டனை ஏன் என்று தான் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார் என்றும் தெரிவித்தார். 
 
ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வந்தால்  நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஒரு ஓட்டு அதிகமாகுமே தவிர வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்