ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல் - கொதித்தெழுந்த எச்.ராஜா

வெள்ளி, 20 அக்டோபர் 2017 (14:09 IST)
ஜி.எஸ்.டி பற்றி மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது.


 

 
சிங்கப்பூரில் 8 சதவீத ஜி.எஸ்.டி வரியை வசூலிக்கிறார்கள். ஆனால், அங்கே மருத்துவத்தை இலவசமாக தருகிறார்கள். ஆனால், இந்தியாவில் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. எனினும், இங்கு எல்லாவற்றையும் பணம் கொடுத்தே பெறுகிறோம் என மெர்சல் படத்தின் இறுதி காட்சியில் விஜய் வசனம் பேசியுள்ளார்.
 
இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “ சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்” என பதிவு செய்துள்ளார்.
 
மேலும் “மெர்சல் பட வசனம் விஜய் அவர்களின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது. முதலில் GST புதிய வரி அல்ல சாராயத்திற்கு 58% மேல் வரி விதிக்கப்படுகிறது” என ஒரு டிவிட்டும்,
 
ஏற்கனவே நாடுமுழுவதும் பள்ளி கல்வி மற்றும் மருத்துவம் அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசம் தான்.
 
விஜய் அவர்களின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா?
 
தமிழகத்தில் கடந்த 20 yr கட்டப்பட்ட சர்ச் 17500, மசூதிகள் 9700, கோவில்கள் 370 இப்ப எதை தவிர்த்து மருத்துவமனை கட்டணும் என்கிறார் விஜய்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்