போர் வரும்போது நாங்களும் பார்ப்போம்: ரஜினிக்கு எச்.ராஜா பதிலடி

Webdunia
திங்கள், 22 மே 2017 (04:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுடனான சந்திப்பின்போது அரசியல் வருகை குறித்து அவர் பேசியபோது, 'போர் வரும்போது பார்த்து கொள்வோம்' என பூடகமாக பேசினார். அதற்கு தேர்தல் வரும்போது ரஜினி களத்தில் இறங்குவார் என்று பலராலும் அர்த்தம் கொள்ளப்பட்டது.



 


இந்த நிலையில் ரஜினிக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, 'போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். போர் வரும் போது பாஜகவும் பார்த்து கொள்ளும் என்று கூறினார். ரஜினியை பாஜக தன் பக்கம் இழுக்க முயற்சித்து வரும் நிலையில் எச்.ராஜா இவ்விதம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ப.சிதம்பரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த எச்.ராஜா, 'ப. சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் குற்றவாளிகள் பட்டியலில் நிரூபிக்கப்பட வேண்டியவர்கள். அதனால் தான் கார்த்தி சிதம்பரம் இப்போதே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். விரைவில் ப.சிதம்பரமும் ஓடி ஒளிவார்' என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்