நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தின்போது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (14:46 IST)
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதம் நடந்து கொண்டிருந்தபோது நீதிமன்ற வளாகத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி  என்ற மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் ஒரு வழக்கின் போது வாதம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த வாதத்தின் போது திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு குறித்து டெல்லி போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் அந்த பகுதியில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்