Lockdown-க்கு டாடா? வாரத்தில் 6 நாட்கள் டியூட்டி: தமிழக அரசு தடாலடி!!

வெள்ளி, 15 மே 2020 (16:00 IST)
மே 18 ஆம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 

 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மே 17ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிகும். 
 
ஆனால் இம்முறை வழகம் போல் இல்லாமல் வேற்பாடுகள் அதாவது தளர்வுகளுடன் இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில், மே 18 ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர் என தமிழக அரசு சற்றும் அறிவித்துள்ளது. 
 
பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும், குரூப் ஏ அதிகாரிகள் அனைத்து நாட்களும் அளுவலகத்திற்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் பணியில் இல்லாத ஊழியர்கள் தேவைப்பட்டால் வேலைக்கு அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வாரத்தில் 6 நாட்களும் கட்டாயம் அலுவலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே தொடக்க கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரும் திங்கள்கிழமை முதல் பணிக்கு திரும்ப வேண்டுமென்று தொடக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்