புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆம், கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,322 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர்.