கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்.. தவறான முன்னுதாரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி

Siva

செவ்வாய், 25 ஜூன் 2024 (13:36 IST)
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது தவறான முன்னுதாரணம் என உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நீதிபதி சுரேஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது ’100 நாள் வேலை திட்டம் என்ற பெயரில் பாதி சம்பளம் எனக்கு கொடுத்துவிடு, மீதி சம்பளம் நீ எடுத்துக் கொள் என்று சொல்லி கிராம இளைஞர்கள் சோம்பேறிகளாக ஆக்கப்படுகின்றார்கள் என்று விமர்சனம் செய்தார்.
 
பாதி சம்பளம் வாங்கும் இளைஞர்கள் அந்த பணத்தை மது கடைக்கு தான் எடுத்து செல்கின்றனர் என்றும் அவர் விமர்சனம் செய்தார். மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவது தவறான முன்னுதாரணம் என்று இந்த நிலை மாற வேண்டும் என்றும் பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போதே மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
நம் முன்னோர்களின் வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அந்த வரலாற்றை சொல்லும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்