இந்தியா மீண்டும் ராமர் மயமாகி வருகிறது: திருச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

Mahendran

புதன், 17 ஜனவரி 2024 (12:01 IST)
இந்தியா மீண்டும் ராமர் மயமாகி வருகிறது என திருச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி அளித்துள்ளார்.  
 
தமிழக ஆளுநர் ரவி இன்று தனது மனைவியுடன் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்பம் மரியாதை செய்தனர். 
 
சாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது  ’நம்முடைய வாழ்க்கை  கோயில் மயமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாகுவதற்கு முன்பாகவே கோயில்கள் அமைக்கப்படும். கோவிலை மையப்படுத்தி கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். 
 
அந்த வகையில் கோவில் என்பது ஒரு ஈர்ப்பு விசையாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் கோவில்கள் மழுங்கடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்