உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ரவி!

Sinoj

வெள்ளி, 22 மார்ச் 2024 (14:34 IST)
முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் பொன்முடி மேல்முறையீடு வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவர் மீண்டும் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் ஆவதற்கு தடை இல்லை என்று கூறப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து சமீபத்தில்  தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பொன்முடிக்கு அமைச்சர் பதவி செய்து வைக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
 
இதற்கு தமிழ்நாடு  ஆளுநர் தரப்பிலிருந்து முடியாது என்று பதில் கடிதம் வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக  தமிழ்நாடு அரசின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம்  தடைவிதித்த பிறகும், பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? என்று உச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
 
 நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது என கூற முடியும்? ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.
 
மேலும், தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமானம் செய்துவைக்க முடியாது என்று கூறியது அவருடைய வேலை அல்ல என்று கண்டனம் தெரிவித்து, இன்றுக்குள் முடிவெடுக்க அவருக்கு கெடு விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஆளுநர் ஆர்.ரன்.ரவி.வருத்தம் தெரிவித்ததாக அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்ச நீதிமன்றத்தில் தகவல்  தெரிவித்துள்ளார்.
 
மேலும் பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சராக பதவி ஏற்க உள்ள பொன்முடிக்கு மீண்டும்  உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில்  பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்