இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் தொடர்பான சீராய்வு மனு கடந்த 15ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அங்கித் திவாரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்திலேயே நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி அவரது ஜாமீன் தொடர்பான சீராய்வு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.