பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்காத ஆளுநர்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு..!

Siva

வியாழன், 21 மார்ச் 2024 (07:07 IST)
பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் இந்த விசாரணையில் இருதரப்பினரும் தங்கள் வாதத்தை எடுத்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் பொன்முடி மேல்முறையீடு வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவர் மீண்டும் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் ஆவதற்கு தடை இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பொன்முடிக்கு அமைச்சர் பதவி செய்து வைக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆளுநர் தரப்பிலிருந்து முடியாது என்று பதில் கடிதம் வந்ததாக கூறப்பட்டது.
 
இதனை  அடுத்து தற்போது தமிழ்நாடு அரசின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த வழக்கின் முடிவு என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்