துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல்!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (15:27 IST)
தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் துணைவேந்தர் நியமனத்திற்கு ஆளுனர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசு 2 வது மனுவை  ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்  ரிட்  மனு தாக்கல் செய்த நிலையில்  இந்த வழக்கு விசாரணை இன்று நடந்து வருகிறது.

இதில்,  2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில்,’ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவிர எஞ்சிய அரசுப் பதவி நியமன கோப்புகளுக்கு அனுமதி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு  கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக’ உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்