கவர்னர் கையெழுத்திடாவிட்டால் 8 மாணவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் சீட்: அதிர்ச்சி தகவல்!

வியாழன், 29 அக்டோபர் 2020 (16:37 IST)
7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவில் கவர்னர் கையெழுத்திடாவிட்டால் இந்த ஆண்டு 8 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் சீட் கிடைக்கும் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என அரசாணை பிறப்பிக்கப்பட்டு அந்த மசோதா கவர்னரின் கையெழுத்துக்காக அனுப்பப்பட்டது. ஆனால் இதுகுறித்து அவர் இன்னும் முடிவு எடுக்காமல் கையெழுத்திடாமல் உள்ளார் 
 
இந்த நிலையில் இது குறித்து தான் வழக்கில் கருத்து கூறிய மதுரை உயர்நீதிமன்ற கிளை ’அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதா நடப்பாண்டிலேயே நிறைவேற்றி 400 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பதே எங்களது ஆசை என்று கூறியுள்ளது
 
இந்த சட்ட மசோதா இந்த வருடம் நிறைவேற்றாவிட்டால் நீட் தேர்வு எழுதிய 8  அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே சேர வாய்ப்பு என்று கூறிய நீதிபதிகள் ஆளுநர் நீதிமன்றதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் பொறுப்புள்ள அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்
 
மேலும் வரும் திங்கட்கிழமை ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நாங்கள் காத்திருக்கின்றோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவில் கவர்னர் கையெழுத்திட்டால் 8 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் சீட் கிடைக்கும் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்