குப்பையாக குவிந்து கிடந்த அரசின் இலவச பொருட்கள்! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (13:14 IST)
கோப்புப்படம்

சென்னை அருகே திருவொற்றியூரில் தமிழக அரசால் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குப்பையாக குவிந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலம் மாநகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நிலையில் பேரிடர் மற்றும் பண்டிகை காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தன்ணீர் புகுந்ததால் அரசு இலவச பொருட்கள் சேதமானதாக தெரிகிறது.

இதனால் அதை ஊழியர்கள் அலுவலகத்தின் பின்புறத்தில் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். அரசு இலவச பொருட்கள் குப்பையில் கொட்டப்பட்டிருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசு பொருட்கள் சேதமானது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்