தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன்களை தயாரிக்க திட்டம்: கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை..!

Siva

வியாழன், 23 மே 2024 (14:08 IST)
தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் பிக்சல் ஃபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தையை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்தியாவில் மொபைல் போன் சந்தை மிகவும் பிரகாசமாக இருப்பதை அடுத்து அந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் அதிக அளவில் கூகுள் பிக்சல் செல்போன்களை தயாரிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
தமிழ்நாட்டில் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ட்ரோன்களை தயாரிக்க கூகுள் நிறுவனம், ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் நிர்வாகிகளை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது .
 
இதனை அடுத்து தமிழ்நாட்டில் தனது கூகுள் பிக்சல் போன் மற்றும் ட்ரோன்களை தயாரிக்க கூகுள் நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் பிக்சல் ஃபோன்கள், ட்ரோகளை தயாரித்தால் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் இதன் காரணமாக தமிழ்நாடு தொழில் துறையில் முன்னேறும் என்றும் புறப்பட்டு வருகிறது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்