தங்கம் வாங்க நல்ல நேரம் - ரூ.280 குறைந்த தங்கத்தின் விலை!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (15:54 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,515 க்கும், ஒரு சவரன் ரூ.36,120 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.70 க்கு விற்பனை ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்