தங்கத்தை வாங்குறதா.. வேடிக்கை பாக்குறதா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

Prasanth Karthick

வெள்ளி, 10 மே 2024 (16:27 IST)
இன்று அட்சய திருதியையில் பலரும் தங்கம் வாங்கி வரும் நிலையில் ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இன்று அட்சய திருதியை என்பதால் மக்கள் தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் தங்கம் அதிகரிக்கும் என தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகமாக ஏற்றத்தை கண்டு வந்தது. இந்நிலையில் இன்று விலை குறையுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.1240 விலை அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் காலையிலேயே சவரனுக்கு ரூ.360 விலை உயர்ந்த தங்கம், அடுத்த சில மணி நேரங்களில் மேலும் ரூ.360 விலை உயர்ந்தது. இந்நிலையில் பிற்பகல் வாக்கில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 மீண்டும் உயர்ந்துள்ளது. ஆக மொத்தம் இந்த ஒரு நாளில் மட்டும் காலையில் இருந்து மூன்று முறை விலை உயர்ந்து சவரன் ரூ.54,160 க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ.155 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,770 க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு நாளில் இவ்வளவு விலை அதிகரித்ததால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள மக்கள் தங்கத்தை வாங்குவதா அல்லது வேடிக்கை பார்ப்பதா என்று விரக்தியடைந்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்